சற்று உயரம் குறைவானவர்.
பேசுவதற்கு முன்பு சிரித்து விடுவார்.
சிரித்தால் கன்னத்தில் குழி விழும்.
இயற்கையாகவே அழகுடையவர் எனினும் மேலும் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுவார்.
மீசைக்கு தனிபட்ட கவனம் செலுத்துவார்.
சிலர் மீசையை முழுமையாக எடுத்து விடுவார்கள்.
பெண்களாயின் மூக்கு குத்த மாட்டார்கள்.
குத்தினால் 2 மூக்கும் குத்தி மூக்குத்தி போடுவார்.
இவரை விட வாழ்க்கைத் துணை உயரமாக இருப்பார்.
பிறர் பேசும் போது கவனிக்காதது போல் இருப்பார். ஆனால் CID.
இவருடைய பேச்சில் உறுதி இருக்கும்.
அதிகம் கேள்விகள் கேட்பார்கள்.
சுவாதி என்றால் நிதான குணம்.
ஏதாவது ஒரு கவலை படுவார்
நிரந்தரமான இன்பம் அடைய விரும்புவார். ஆனால் அது பாதியில் நிற்கும்.
சந்தோஷம் தூரத்தில் அழைக்கும், இவர் நெருங்குவதற்குள் மறைந்து விடும்.
வீண் சந்தேகமும் பயமுமே இதற்கு காரணமாக இருக்கும்.
விசாகத்தில் தோன்றியவர் ஜாலியான நபர் ஆவார். ஆனால் பற்றற்றவர் போல் இருப்பார்.
முகத்தில் அல்லது உதட்டில் வடு அல்லது மச்சம் இருக்கும்.
ரெண்டு பக்கமும் பேசுவார். ஆனால் இறுதி முடிவு இவருடையது தான்.
தந்திரம் இல்லாதவர்.