உடல் சிறிது தடித்து உயரம் அதிகம் இல்லாமல் கழுத்து பெருத்து உருண்டையான முகம் உடையவர்.
திரண்ட தோள் பரந்த மார்பு கம்பீர தோற்றத்துடன் இருப்பார்.
பிறரிடத்தில் சரளமாகப் பேசுவார்கள்.
எதிர்ப்பை எதிர்த்து வெற்றி கண்டு மகிழ்ச்சி அடைவார்
தற்பெருமை உடையவர்.
மார்பில், இருதயபாகத்தில் தழும்பு (அ) மச்சம் இருக்கும்.
முகத்தில் ரோமம் அடர்ந்து இருக்கும் சிலருக்கு நெற்றியில் 2 கோடுகள் இருக்கும்.
கோபம் வந்தால் நாக்கை கடித்து மடித்து கொள்வார்.
பேசும் போது ஒருமுறை கேட்டதை, மீண்டும் சொல்லும் படி கேட்பார்.
ஒரே நேரத்தில் பல விஷசயங்களில் கருத்தை செலுத்துவார்கள்
ராஜதந்திரம் உடையவர், பிறரின் ராஜ தந்திரம் சிம்மத்திடம் செல்லாது.
சூடான உணவை விரும்பு சாப்பிடுவார்.
பொதுவாக அசைவ உணவில் விருப்பம் இருக்கும்.
குடி தண்ணீர் அதிகம் குடிப்பார்.
விலையுயர்ந்த பானங்களை விரும்புவார்.
உயர்ந்த உணவு வகைகளை சாப்பிட விரும்புவார்.
பெருந்தன்மையோடு நடந்து கொள்வார். ஆனால் முன்கோபம் அதிகம் வரும்.
சிறிய விஷயத்திற்கும் பெரும் கோபம் வரும்.
சிலர் எத்தகையை காரியத்தையும் துணிந்து செய்வார்கள்.
நியாயம் தவறாதவர்..
வாழ்வில் பல தோல்வி அடைந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவார்.
பிரயாணத்தின் போது அடிக்கடி மழையில் நனைவார்.
குதர்க்க வாதிகளை அடித்துப் பேசுவார், கோபம் வந்ததும் கையை ஓங்கி விடுவார்.
மன்னிப்பு கோரினால் கண்ணியத்துடன் மன்னித்து விடுவார்.
வழக்குக்கு போகமாட்டார் வந்தால் விடமாட்டார்.
எல்லோரும் இவர்க்கு அடங்கி நடக்க வேண்டும் என்று நினைப்பார்.
இவரை எதிர்ப்பவர்களை நசுக்கி அழிக்காமல் உறங்க மாட்டார்.