அழகானவர் / உணர்ச்சி வசப்படக் கூடியவர்.
இளமையில் ஒல்லியாய் இருந்து மத்திம வயதில் பருமன் ஆவார்.
வசீகரமான கண்கள் / அழகான கன்னம் உடையவர்.
சிறிய கழுத்து அகன்ற மார்பு.
குறுகுறுப்பான பார்வை உடையவர்.
வேகமான நடப்பார். / விடா முயற்சி செய்பவர்.
முதலில் எவரையும் சந்தேகிப்பார் பழகிய பின் தன் உள்ளத்தைப் பறி கொடுப்பார்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் தன் பணிகளை எவ்வளவு சிரமப்பட்டாலும் முடித்திடுவார்.
உயர்ந்த லட்சியங்கள் திட்டங்கள் உடையவர்.
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்.
எதையும் தீர ஆலோசித்து முடிவெடுப்பார்.
முடிவு செய்து விட்டால் எதிர்ப்புகள் வந்தாலும் நினைத்ததை முடிக்கும் வரை ஓயமாட்டார்.
எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவு உடையவர்.
ஞாபக சக்தி அதிகம் இருக்கும். / கோழித்தூக்கம் தூங்குபவர்.
எதையும் சேமித்து வைக்கும் பழக்கம் இருக்கும்.
வேலையாட்களிடம் அபார நம்பிக்கை வைப்பார் அவர்களுக்காக எதையும் தியாகம் செய்வார்.