மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம் உடையவர்.
நீண்ட கழுத்து உடையவர்.
முகத்தில் அல்லது தலையில் தழும்பு இருக்கும்.
7 முதல் 13 பாகைக்குள் (டிகிரி) லக்னம் இருந்தால் முடி சுருட்டை முடியாக இருக்கும்.
பல் பிரச்சினை இருக்கும்.
ஆரோக்கிய விஷயத்தில் பயப்படுவார்.
அமைதியான தோற்றம் இருப்பினும் சுற்றுப்புறத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்.
உருவத்திற்கும் உள்ளத்திற்கும் சம்பந்தம் இருக்காது.
இவரைக்கண்டு மற்றவர்கள் பயப்படுவார்கள்.
சிக்கனவாதியாக இருப்பார். (கஞ்சன்)
பொது அறிவு அதிகம் கொண்டவர்.
மனதில் பட்டதை உடனே பேசி விடுவார்.
எதையும் முழுமையான விளக்கத்துடன் கூறுவார்.
ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் வெற்றியோடு முடிப்பார்.
ஆனால் பொறுப்பை ஏற்க தயங்குவார்.
தற்பெருமை கொண்டவராக இருப்பார்.
தன் கொள்கையில் பிடிவாதமானவர்.
நம்பர் 1 காரியவாதி.
விளையாட்டில் ஆர்வம் உடையவர்.
அசைவ உணவு பிரியர்
தான் உண்ணும் உணவு அசைவமாக இருந்தால் அதை புகழ்ந்து பிரபலப்படுத்தி பேசுவார்.
தந்தையிடம் கருத்து வேறுபாடு இருக்கும்.
சகோதர ஒற்றுமை இருக்காது.
குழந்தைகளால் பிரச்சினை இருக்கும்.
குழந்தைகள் திருமணவாழ்வில் பிரச்சினை ஏற்படும்.
நண்பரே எதிரியாக மாறுவார்.